வகைப்படுத்தப்படாத

உந்துருளியில் வந்த இருவர் மாணவி மீது ஊசிய ஏற்றிய கொடூரம்…

(UDHAYAM, COLOMBO) – கந்தளாய் – பேரமடுவ பிரதேசத்தில் 10 வயது மாணவி மீது வீதியில் வைத்து ஊசி ஏற்றப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய வேளை உந்துருளியில் பின்தொடர்ந்து வந்த இருவர் இவ்வாறு அவர் மீது ஊசியை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

உந்துளியில் வந்த இருவரும் மாணவியின் வலது கையின் தோற்பட்டையில் ஊசியை ஏற்றியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரிடம் தெரியப்படுத்திய நிலையில், கந்தளாய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் நலமாகவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமியிடமிருந்து பெறப்பட்டுள்ள இரத்த மாதிரி, மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்போதுர காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

காலநிலை

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்கள் ஆராயவுள்ளனர்

Lanka IOC revises fuel prices