முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) காலை வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இல்லம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் ரத்து சட்டமூலம் மறுசீரமைப்புகள் இன்றி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான விசேட பிரதிபலன்களை ரத்து செய்யும் நோக்கில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாரியார்கள் உட்பட ஓய்வுப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளும் ரத்தாகியுள்ளன.
இந்நிலையில் சட்டமூலத்தை, சட்டமாக அமுல்படுத்துவதற்கான பத்திரத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கையொப்பமிட்டுள்ளார்.