உள்நாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரும் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு முன்னதாக எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணியை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிறதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைமையகத்திலிருந்து நாடாளுமன்றம் வரை இந்த வாகன பேரணி பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

குப்பை மேட்டை அகற்றுமாறு மக்கள் போராட்டம் [VIDEO]

அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை – அறுகம்பே பகுதியில் நடப்பது என்ன ?

editor

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor