உள்நாடு

உணவு ஒவ்வாமை – 52 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேச பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் பெறப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 52 மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மாணவர்கள் பாடசாலை இடைவேளை நேரத்தில் பாடசாலையிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் நூடில்ஸை பெற்று கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கரடியனாறு மகா வித்தியாலய தரம் ஆறு முதல் உயர்தரம் வரையிலான 21 ஆண்களும் 31 பெண்களுமாக 52 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று உணவு மாதிரிகளை பரிசோதித்து வருகின்றனர்.

கரடியனாறு பொலிஸார் பாடசாலக்குச் சென்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Related posts

அரச வெசாக் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணத்தில்

கொரோனா : மருத்துவ பரிசோதனை அறிக்கை இன்று

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு