உள்நாடு

உணவுப் பொருட்களை பகிர்ந்தளிப்பது தொடர்பிலான சுற்றுநிரூபம் வெளியீடு

(UTV|கொழும்பு) – பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரத்தை மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கும் சுற்றுநிரூபம் பொது நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த சேவைகளை வழங்குவதற்காக மாவட்ட ரீதியில் நிறைவேற்று அதிகாரிகளை கொண்ட உதவி அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அரச மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்கள், பல்பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களின் பங்களிப்புடன் நடமாடும் சேவையை ஏற்பாடு செய்து சகல வீடுகளுக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு தேவையான ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு பொலிஸ் நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை