சூடான செய்திகள் 1

உணவுப் பொருட்களை கைகளால் தொட்டு ​விற்பதற்கு தடை

(UTV|COLOMBO)-எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து உணவுப் பொருட்களை நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக எதிர்வரும் 3 மாத கால பகுதிகளுக்குள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களை தெளிவுப்படுத்துமாறு மாகாண மற்றும் மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இன்று துண்டு பிரசுரம் விநியோகிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

அரச நிர்வாக அதிகாரிகள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில்

புதிய இராணுவ தளபதி நியமனம்