உள்நாடு

உடன் அமுலாகும் வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை

(UTV | கொழும்பு) – கடந்த 14 நாட்களுள் வியட்நாமுக்கு சென்ற அனைத்து விமான பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்திய மற்றும் பிரித்தானிய கொரோனா வைரஸ்களின் கலப்பு வைரஸ் ஒன்று, கடந்த தினம் வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன்அமுலாகும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாம் சென்ற பயணிகள் மற்றும் இடைத்தங்கல் (Transit) பயணிகள் எவருக்கும் இவ்வாறு தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அநுரவிடம் கையளித்தனர்

editor

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!

கடவுச்சீட்டு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட தகவல்

editor