விளையாட்டு

உசைன் போல்ட், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பார்

(UDHAYAM, COLOMBO) – இந்த ஆண்டு நடைபெறும் உலக சாம்பியன்ஸிப் மெய்வல்லுனர் போட்டிகளின் பின்னரும், உலக அதிவேக குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட், ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

ஜமேக்காவைச் சேர்ந்த 30 வயதான உசைன் போல்ட், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஸிப் மெய்வல்லுனர் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தொடரில் எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி நடைபெறவிருந்த 100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியே அவரது இறுதிப் ஓட்டப் பந்தயமாக அமையும் என்று கூறப்பட்டது.

எனினும் ஓய்வு பெறுவது குறித்து தாம் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்று, உசைன் போல்ட் கூறியுள்ளார்.

இது குறித்து தாம் தமது பயிற்றுவிப்பாளருடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

IPL 2021 – பெங்களூர் அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது

IPL 2021 : இலங்கை அணியின் 09 வீரர்கள் சாத்தியம்