வகைப்படுத்தப்படாத

உங்கள் அழகை பாதுகாக்க சில டிப்ஸ்…

*தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு உறங்கவும். மேக்கப்புடன் தூங்க   செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும்.

* தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம்.

*வெயிலில் சென்றால் சன்ஸ் கிரீம் போட்டு கொள்ளவும். சூரியனில் இருந்து வரும்   கதிர் முகத்தை காயப்படுத்தும். இதனாலே பல முக பிரச்சனை வருகிறது. சன்ஸ் கிரிம் தேர்வும் முக்கியம். இதனை அருகில் உள்ள மருத்துவரை கேட்டு முடிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதரின் தோல் ஏற்ப இது மாறலாம்.

* நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.

* தினமும் ஏதேனும் செய்து உடலில் இருந்து வேர்வை வெளியேற்றுவது அவசியம். இதற்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்யலாம். இதனால் சருமம் பொலிவடையும்

* எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கத்தின் பாதியில் சிறுநீர் கழிக்க கூட எழுந்திரிக்க கூடாது. முழுமையாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், சருமத்தில் தேனைப் பூசி கொண்டால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்

* குறைந்தது ஒரு நாளுக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். ஆரஞ்சு, தர்ப்பூசணி சாப்பிடவும். இது சருமத்தை குளுமையாக வைத்திருக்கும்.

* தினமும் முகத்தை மூன்று முறையாவது வெந்நீரால் மசாஜ் செய்து கொள்ளவும் இதனால் முகத்தில் உள்ள ஆசிட் வகைகள் நீக்கப்பட்டு சருமம் பளபளக்கும்

* மாதம் ஒரு முறையோ, வாரம் ஒரு முறையோ ஸ்பா சென்று மசாஜ்கள் செய்து கொள்ளலாம்

* மன உளைச்சல் அறவே கூடாது. மன உளைச்சல் சருமத்துக்கு கேடு. அகமே புறம். புறமே அகம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

 

 

Related posts

சற்றுமுன் ஆரம்பமானது வடமாகாண ஊடப்பயிற்சி

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு

Luxury goods join Hong Kong retail slump as protests bite