உள்நாடு

உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகே 20 இலங்கையர்கள் தஞ்சம்

(UTV | உக்ரைன்) – உக்ரேனில் சிக்கித் தவிக்கும் 20 இலங்கையர்கள் உக்ரைன் – போலந்து எல்லைக்கு அருகில் உக்ரைனை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

துருக்கி, ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவிக்கையில், அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய போலந்து ஊடாக பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் குறித்து எல்லை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களையும் ஏனையோரையும் போலந்து ஊடாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் தென் கொரிய தூதுவர்

editor

இளைஞர் விவகார அமைச்சின் அலுவலகம் இடமாற்றம்

பாராளுமன்ற அமர்வு | Parliament LIVE – 2023.05.23