ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந் நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல்கள் காரணமாக எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படுவதால் பெற்றோல் விற்பனையகங்களில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகன சாரதிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிரீமியா பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை அதிகம் நிலவுவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.