உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் : சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை கைது செய்யுமாறு மனு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவரும் தற்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜயவர்தனவை கைது செய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வண. ஜூட் வெர்னன் ரொஹான் சில்வா மற்றும் சூரஜ் நிலங்க ஆகியோரே இந்த மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

வவுனியா, ஓமந்தை பகுதியில் கோர விபத்து – இருவர் பலி – 9 பேர் காயம்

editor

இன்று மாலை திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

Elon Muskயின் ஸ்டார்லிங்க் வலையமைப்பு இலங்கைக்கு!