உலகம்

ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவில் போராட்டம்

(UTV|ஈரான் )- ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம் என வலியுறுத்தியும் போர் வேண்டாம் என தெரிவித்தும் நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் இருந்து வருகின்ற நிலையில், ஈரான் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா குண்டுவீசிக் கொன்றது.

இதற்கு பதிலடியாக ஈராக்கில் எர்பில் மற்றும் அல்-ஆசாத் ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்காவின் இராணுவத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டாம், போர் தொடுக்க வேண்டாம் என நூற்றுக்கணக்கான நியூயார்க் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது – ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

editor

கஜகஸ்தானில் அவசர கால நிலை பிரகடனம்

காசாவை கட்டியெழுப்பும் 53 பில். டொலர் திட்டத்திற்கு அரபுத் தலைவர்கள் இணக்கம்

editor