வகைப்படுத்தப்படாத

ஈரானில் விமான விபத்து – 11 பேர் பலி

(UTV|IRAN)-துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்றது. அதில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையினருடன் அங்கு விரைந்து சென்று சிதறி கிடந்த 11 பேரின் உடல்களை மீட்டனர் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 66 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அம்பகமுவ பிரதேச சபையை மூன்றாக பிரிப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

Austria orders arrest of Russian in colonel spying case

மஹிந்தாநந்தவிற்கு பிணை