உலகம்

ஈரானில் ஒரு இலட்சத்தை தாண்டிய நோயாளிகள் எண்ணிக்கை

(UTV|கொழும்பு) – ஈரான் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

கடந்த சில தினங்களாகக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகமாகி உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,680 ஆக உயர்ந்துள்ளது.

இதன்படி, ஈரானில் 101,650 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,418 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கொரோனா  என சந்தேகிக்கப்பட்ட நபர் சுட்டுக்கொலை

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா – முழு விபரம்

Shafnee Ahamed

கட்டுப்பாடுகளை நீக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்