உள்நாடு

ஈரானிய தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டிற்கு

(UTV|கொழும்பு)- உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் நேற்று(15) ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கபப்டுகின்றன.

தொழிநுட்பவியலாளர்கள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.

உமா ஓயா பல்நோக்கு திட்ட நிர்மாணப்பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஏனைய பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஜம்பட்டா வீதி கொலைச் சம்பவம்; சந்தேநபர் கைது

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

editor

எதிர்வரும் செவ்வாயன்று முதல் இரவு வேளைகளில் மின்துண்டிப்பு