உலகம்

ஈரானால் சுடப்பட்ட உக்ரைன் விமானம் – கைது நடவடிக்கை ஆரம்பம்

(UTV|கொழும்பு) – உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை, ஏவுகணை தாக்குதல் நடத்தி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக ஈரான் நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவ்க்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக குறித்த இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான விசாரணை சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் நடைபெறும் என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

Related posts

கப்பலில் பரவியது கொரோனா வைரஸ் : 3,700 பயணிகளின் நிலை கவலைக்கிடம்

எங்களின் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன – காசா மருத்துவமனையின் இயக்குநர்

சீன அதிபரிடம் மன்னிப்பு கேட்ட பேஸ்புக்