வகைப்படுத்தப்படாத

ஈராக் – திர்கிட் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

(UTV|IRAQ)-ஈராக் நாட்டின் திர்கிட் பகுதியில் உள்ள உணவகம் அருகில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

Related posts

கோடபாய ராஜபக்ஷ கோரிய மனு ரத்து

Honduras fishing boat capsizes killing 26

பெசில் மற்றும் திருக்குமரன் நடேசனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்