உள்நாடு

இ.தொ.க வின் முக்கிய உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி காலமானார்!

(UTV | கொழும்பு) –

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும், முன்னாள் ஊவா மாகாண சபை உறுப்பினருமான ஆறுமுகம் கணேசமூர்த்தி திடீர் உடல்நலக் குறைவால் நேற்று காலை வெளிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் காலமானார்.

ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், மற்றும்  பசறை தமிழ் தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவரான இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடாக லுனுகலை பிரதேச சபையின் உறுப்பினராகவும், முன்னாள் ஊவா மாகாண சபையின் உறுப்பினராகவும் இருந்து இவர்

மக்களுக்காக பல சேவைகள் செய்துள்ளார்

ஊவா மாகாண சபையின் உறுப்பினராக இருந்த காலத்தில் பதுளை மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு மாகாண தமிழ் கல்வி அமைச்சின் கருத்திட்ட ஆலோசகராக இருந்த காலத்தில் விஞ்ஞான துறையை மேம்படுத்த காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இவரது பூதவுடல் நேற்று அவரின் மனைவியின் ஊரான ஹாலிஎல ஊவா கட்டவலயில் உள்ள  இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படு . இன்று 21 ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு அவரது பிறந்த ஊரான லுணுகலை ஹொப்டன், அம்பலாங்கொடைக்கு எடுத்து செல்லப்பட்டு அவரின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

பின்னர் நாளை 22ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு அம்பலாங்கொடை தோட்டப் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 தமிழர் தரப்புக்கும் – அரசுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சு வார்த்தை கடந்தகாலங்கள் போன்று மாறிவிடக்க்கூடாது

“IMF பேச்சுகளில் உயர் முன்னேற்றம்” – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சூரி­ய­ கி­ர­க­ணத்தை வெற்­றுக் கண்களால் பார்ப்பது பாதிப்பு