சூடான செய்திகள் 1

கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று(13) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.

இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

Related posts

UPDATE-மாத்தறை துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கைது

இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியா பிரதமர்

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை