உலகம்

இஸ்ரேல் இடையேயான அமைதி ஒப்பந்தம் கைச்சாத்தானது

(UTV | வாஷிங்டன்) – பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சமரசத்தையடுத்து அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பங்கேற்றார்.

இஸ்ரேல்,பஹ்ரைன், அரபு அமீரகத்தின் தூதரகங்கள் உருவாக்கப்படும் என்றும் தூதர்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும் பங்குதாரர்களாக ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்றும் நண்பர்களாக இருப்பார்கள் என்றும் வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்கனவே ஜோர்தான், எகிப்து ஆகிய நாடுகளுடன் பஹ்ரைனும் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து இஸ்ரேலுடன் சமரசம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை உயர்வு

ஜனவரி 10ம் திகதி வரை ஊரடங்கு அமுலில்