உள்நாடு

இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்களுக்கு அவர்களின் சுதந்திர நாட்டை விடுவிக்குமாறும் அந் நாட்டில் நடைபெறும் கொலைகளை நிறுத்துமாறும் கோரி இஸ்ரேலுக்கு எதிராக அமைதியான ஆர்ப்பாட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டமானது, நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் றிஸ்வி சாலிஹ் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில்,

பாலஸ்தீன மக்களின் குழந்தைகள், தாய்மார்கள் கொன்று குவிப்பதை தடுத்து நிறுத்தல் வேண்டும். இதற்காக இலங்கை உட்பட உலக நாடுகள் ஒன்றுபட்டு ஐ.நா. ஊடாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்தல் வேண்டும். இந்த நோன்பு மாதத்தில் அவர்கள் செய்யும் கொலைகளை உடன் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பாலஸ்தீன சுதந்திர இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மைத்திரி ரிட் மனுதாக்கல்

இந்தியா மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தை கொண்டுள்ள சிறந்த நாடு : முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் புகழாரம்

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி