வகைப்படுத்தப்படாத

இஸ்தான்புல் மருத்துவமனையில் திடீர் தீ

(UTV|ISTANBUL)-துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல்லின் காசியோமன்பசா பகுதியில் அமைந்துள்ளது பல மாடிகள் கொண்ட மருத்துவமனை.

இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ மளமளவென பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.

தகவலறிந்து அங்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகள் விரைவாக மீட்கப்பட்டனர். மருத்துவமனையில் தீப்பிடித்து எரிவது தொடர்பான காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

රැකියා විරහිත උපාධිධාරින් 16,800 කට පත්වීම් ලබාදීම හෙට

கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர்உயிரிழப்பு

பாதீட்டின் குழு நிலை விவாதத்தின் மூன்றாம் நாள் இன்று