உள்நாடு

இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி என்ற பெண் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (23) இடம்பெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றின் போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக உறுதிபூர்வமான தகவல்கள் எதுவும் எமக்கு கிடைக்கவில்லை.

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதாக பரவும் தகவல்கள் போலியானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மீண்டும் மின்வெட்டு அமுலாகும்

அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த எந்த தீர்மானமும் இல்லை – பிரதமர் அலுவலகம்

இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை