உள்நாடு

இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தன் என்பவரிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பீங்கான் பொருட்கள் இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்கத்துக்கு பதிலளிக்க பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வர வேண்டும் – நாமல் ராஜபக்ஷ எம்.பி

editor

வீடியோ | தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor