இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முன்னாள் அதிகாரிகள் மற்றும் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, இரு தரப்பினருக்கும் திருப்திகரமான தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அமைச்சரிடம் இதன்போது யோசனை முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இளைஞர் சங்கங்களைத் தொடங்கினேன்.
கிராமத்தின் இளைஞர்களும் ஒன்று கூடும் இடமாக பொழுதுபோக்குகள், கலைகள் மற்றும் பிற செயல்பாடுகளுக்காக அந்த இளைஞர் சங்கங்கள் மூலம் இளைஞர்களின் திறமைகளை வளர்ப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.
அந்த இலக்கு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இளைஞர்கள் தற்போது சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்கேற்கின்றனர்.
இந்த நாற்பது ஆண்டுகளில், இளைஞர் சங்கங்கள் இந்த நாட்டின் முக்கிய இளைஞர் இயக்கமாக மாறியுள்ளன.
இளைஞர் சங்கங்களிலிருந்து முன்னேறிய சிலர் அரசியலில் நுழைந்துள்ளனர்.
சிலர் வணிகங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னேறுவதற்கான திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
அரசியலமைப்பில் அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது. எல்லா இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தேசிய மாநாடு நடைபெறுகிறது. எனது தகவலின்படி, அதன் பிறகும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இது தொடர்ந்தால், இளைஞர் சமூக இயக்கம் குறையும்.
இளைஞர் சமூக இயக்கத்தை அரசியலாக்க குறித்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
அதை மிகைப்படுத்தாமல். இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
போராட்டம் நடத்தும் முன்னாள் அதிகாரிகள் குழுவுடனும், தற்போதைய மாவட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி, அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வை வழங்குங்கள்.
இந்த நாட்டில் இளைஞர் சமூக இயக்கம் அரசியலுக்குப் பயன்படுத்தப்படாது என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அது அமைச்சரும் இந்த இரண்டு குழுக்களும் இணைந்து செய்யக்கூடிய ஒரு பணியாகும்.
அந்தப் பணி செய்யப்படாவிட்டால், இந்தப் போராட்டங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறும்.
பின்னர் அரசியல் கட்சிகளும் இவற்றில் ஈடுபடலாம். அது நடந்தால், இந்த இளைஞர் சமூக இயக்கம் மறைந்துவிடும்.
இந்த இளைஞர் சமூக இயக்கத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதனால்தான் இந்த சிறு தகவலை உங்களுக்கு வழங்க முடிவு செய்தேன்.” என்றார்.