உள்நாடு

இளைஞனின் விதைப்பையில் உதைத்த டீச்சர் அம்மாவை கைது செய்யுமாறு உத்தரவு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் ‘டீச்சர் அம்மா’ என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் இளைஞர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானமை தொடர்பில் அவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹயேஷிகா பெர்னாண்டோ அந்த இளைஞனை உதைத்துள்ள நிலையில், அந்த உதை இளைஞனின் விதை பகுதியினை பாதித்துள்ளதுடன், பின்னர் அவர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு, ஹயேஷிகா பெர்னாண்டோ அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரது கணவர் மற்றும் ஹயேஷிகா பெர்னாண்டோவின் முகாமையாளர் இருவரும் கட்டானா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான ‘டீச்சர் அம்மா’ என்ற ஹயேஷிகா பெர்னாண்டோ தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கட்டான பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

“பாராளுமன்றை கலைக்க மாட்டோம்” பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.பி தலதா அத்துகோரள நியமனம்

editor

பழுதடைந்த பழவகைகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு

editor