கேளிக்கை

இளம் நடிகருடன் இணையும் நயன்தாரா

(UTV|INDIA) நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், விஜய் தேவரகொண்டா. ஆனால் நோட்டா படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய் தேவராகொண்டா ஜோடியாக தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிக்க உள்ளதாக தெரிகிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நயன்தாரா விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகிவரும் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். மேலும், முருகதாஸ்–ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் இவர்தான் கதாநாயகி என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.

 

 

 

Related posts

டிரம்ப்பையும் விட்டு வைக்காத சிவா

6 வருடங்களின் பின் மீண்டும் ஜெனிலியா

முரளிதரனாக விஜய் சேதுபதி – வெடிக்கும் சர்ச்சை