உள்நாடு

இலஞ்ச வழக்கில் இருந்து குமார வெல்கம விடுவிப்பு

(UTV | கொழும்பு) – தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, போக்குவரத்து அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையில் அப்போது இல்லாத பதவியை உருவாக்கி சம்பளம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய இணக்கம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த விடுவிப்பு இடம்பெற்றுள்ளது.

Related posts

ராஜகிரிய பகுதியில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

editor

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்