அரசியல்உள்நாடு

இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய மனுஷ நாணயக்கார அழைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படும் வரை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற மனுஷ நாணயக்காரவின் கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (14) நிராகரித்தது.

Related posts

சஜித் பிரேமதாசவுக்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு

ராஜகிரிய பகுதியில் தீ பரவல்