நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலகத்துக்கு அருகில் இலஞ்சம் பெற முயன்ற தரகர் ஒருவரை இலஞ்சம் ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.
ஆணைக்குழு நடத்திய திடீர் நடவடிக்கையின்போது இந்தக் கைது இடம்பெற்றது. இதன் போது சந்தேக நபர் 10,000 ரூபா இலஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் பதிவுச் சான்றிதழை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளால் அசல் பதிவுச் சான்றிதழுடன் திருத்தி எழுதுவதற்கு, சந்தேக நபர் மொத்தம் 30,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.