உள்நாடுபிராந்தியம்

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது

கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, ​​குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

அனைத்து அரச பணியாளர்களும் வழமைப்போன்று அரச பணிகளில்

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்க தற்காலிக தடை