உள்நாடு

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கைது

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கைதி ஒருவரை மாற்றுவதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டில், கைதி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர், அவர் தொடர்ந்தும் அங்கு தங்கி சிகிச்சைப் பெறுவதற்காக இலஞ்சமாக, ரூ. 1,500,000 கோரப்பட்டதோடு, அதில் ரூ. 300,000 இலஞ்சமாகப் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (13) காலை பிட்டகோட்டேயில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் வைத்து, இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க கைது செய்யப்பட்டார்.

அவர் தற்போது அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளராக (செயல்பாட்டு) பணியாற்றி வருகிறார்.

கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

கொரோனாவால் உயிரிழந்த இரண்டாவது நபரின் இறுதிக் கிரியைகள்

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor