அரசியல்உள்நாடு

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, ​​தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் அவர் ஆஜராக முடியாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது

Related posts

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

’74 வருட சாபக்கேட்டை முடிவுக்கு கொண்டு வருவோம்’ – ஆர்ப்பாட்டம் ஆரம்பம்