பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கலாசாரப் பிரிவின் (நிர்வாகம்) செயற்பாட்டு பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று கைது செய்தது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட தனிநபர்களிடமிருந்து ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார்
காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் மற்றொரு நபரின் பெயரில் மூன்று கணக்குகளைத் திறந்து, பொலிஸ் சேவைகளைப் பெற வந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட நபர்களிடமிருந்து அந்தக் கணக்குகளில் ஒன்றரை மில்லியன் ரூபாவுக்கு மேல் வரவு வைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழு சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.
சந்தேகநபர் சட்டவிரோத மசாஜ் நிலையங்களிலிருந்தும் பணம் பெற்று மூன்று வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை வரவு வைத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்தது.