உள்நாடு

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து

இலங்கை விமான படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09) காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு விழாவின்போது ஹெலிகொப்டரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹெலிகொப்டரில் 2 விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும், 2 விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

காலி முகத்திடல் போராட்டத்திற்கு 9வது நாள்

“அலி சப்ரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்” புகைப்படங்கள்

காலியில் இராஜாங்க அமைச்சர் சானக்கவின் மாமனார் சுட்டுக் கொலை!