உள்நாடு

இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு சமர்ப்பிப்பு

(UTV | ஜெனீவா) – இலங்கை மீதான தீர்மானத்தின் இறுதி வரைவு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பான விவகாரங்களுக்கான கூட்டுக்குழுவினால் இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பிலான மனித உரிமை ஆணையாளரின் கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை வலியுறுத்துதல் ஆகிய விடயங்கள் இந்த தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளரினால் 51 ஆவது அமர்வில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூலமான அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறித்த இறுதி வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

580 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பகுதிகள்

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

editor

Update – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்!