உள்நாடு

இலங்கை மின்சார சபை வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

2025 ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதியுடன் உடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபையால் 5.31 பில்லியன் ரூபாய் இலாபத்தை பதிவு செய்ய முடிந்துள்ளது.

முந்தைய காலாண்டில், அதாவது 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிதியாண்டின் காலாண்டில், 18.47 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த காலாண்டில் இவ்வாறு அந்த சபை இலாபம் ஈட்டியுள்ளமை விசேட அம்சமாகும்.

2025 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் மின்சார சபை இலாபகரமான பாதையில் நுழைய முடிந்ததுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருப்பினும், 2024 ஜூன் காலாண்டில் சபையால் ஈட்டப்பட்ட 34.53 பில்லியன் ரூபாய் லாபத்துடன் ஒப்பிடும்போது, ஜூன் 2025 காலாண்டில் ஈட்டப்பட்ட இலாபம் 85% குறைவைக் காட்டுகிறது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2025 ஜனவரி மாதத்தில் மின்சார கட்டணம் சுமார் 20% குறைக்கப்பட்ட நிலையில், இது 2025 மார்ச் காலாண்டில் அறிவிக்கப்பட்ட இழப்புக்கு பெரும்பாலும் காரணமாகும்.

இது தொடர்பாக, சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் அடுத்த தவணையைப் பெறுவதற்கு, இலங்கை செலவு ஈடுகட்டும் மின்சார கட்டணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறியது.

அதன்படி, 2025 ஜூன் இல் மின்சார கட்டணம் மீண்டும் திருத்தப்பட்டது.

Related posts

அமைச்சர் பதவிகளை எடுப்பது கட்சியின் முடிவுக்கு எதிரானது

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஆரம்பம் | Live வீடியோ

editor