உள்நாடு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு சட்டமூலம் குறித்து கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம் ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.

ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு, மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.

மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

இதுவரையில் 114 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ்

அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இறக்குமதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இடைக்காலத் தடை உத்தரவு

editor