உள்நாடு

இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் கோப் குழுவுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ இன்று மீண்டும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி இன்று முற்பகல் 11.00 மணிக்கு கோப் குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 10ஆம் திகதி கோப் குழுவிற்கு வழங்கிய அறிக்கையை மீளப்பெறுவது தொடர்பில் பெர்டினாண்டோ சமர்ப்பித்த கடிதம் அண்மையில் கோப் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் உள்ள உரிய உண்மைகளை மீள்பரிசீலனை செய்து அவர் கோரிய சாட்சியத்தின் ஒரு பகுதியை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்க கோப் குழு தீர்மானித்துள்ளது.

Related posts

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 71 பேர் நாடு திரும்பினர்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் நடந்த ஊழல் குறித்து ஜனாதிபதி அநுர அறிவுறுத்தல்

editor

இலஞ்சம் பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது