உள்நாடு

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின் அடிப்படையில் வலுசக்தி துறையில் உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான இலங்கை மி;ன்சாரசபையை தனியார் மயப்படுத்தாமல் விரிவான பொதுமற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் மின்சார சட்டத்தில் திருத்தம் மூலம் பல முன்முயற்சிகளை செய்யவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

கணிதப்பாட விருத்திக்கான விசேட வேலைத்திட்ட நடவடிக்கை

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை