விளையாட்டு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று (03)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது.

ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும் போட்டி, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

7 வருடங்களுக்கு பின்னர் இலங்கை அணி, தென்னாபிரிக்காவில் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இதுவரை 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதுடன், 31 போட்டிகளில் இலங்கை வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

புதுவருடத்தை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை அணி

editor

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம்