வணிகம்

இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தக உறவு மற்றும் இலங்கையில் முதலீடு செய்தல் குறித்து சாதகமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்ச ரவி கருணாநாயக்க தெரிவத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி இளையுதிர்கால கூட்டத்திற்காக வொஷிங்டன் சென்றுள்ள நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வர்த்தக சம்மேளன உயர்மட்ட அதிகாரிகளுடன் அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

உட்கட்டமைப்பு, விவசாய பொருட் பதனிடல், சுகாதார, ஏற்றுமதிக்கான பொருளுற்பத்தி மற்றும் சுற்றுலாத்துறை போன்ற துறைகளை மேம்படுத்துவது குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைபாட்டை இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு துறைமுகத்தில் 2. 6 மில்லியன் கொள்கலன்கள்

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

பில்ட் ஸ்ரீலங்கா 2017 கண்காட்சி