உள்நாடு

இலங்கை மத்திய வங்கியில் நிதி மோசடி – முன்னாள் கணக்காளர் கைது!

இலங்கை மத்திய வங்கியில் 7.7 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் கணக்காளர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

7.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கலகெடிஹேன பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்று குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

நிதி புலனாய்வுப் பிரிவின் தொழில்நுட்ப உதவிப் பிரிவினால் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த சந்தேக நபர் இலங்கை மத்திய வங்கியில் கணக்காளராகப் பணியாற்றியபோது போலி மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடியைச் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

அடுத்த வாரத்துக்குள் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்கு

ஜனாதிபதிக்கும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

IMF கூறியமைக்கேற்ப மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்படுமா? சஜித் கேள்வி

editor