உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

182,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 42,500 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 60,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், 364 நாட்களில் முதிர்வடையும் 80,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும் உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

ரணில் – சஜித் சந்திப்பு  

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

கோமாளிகளின் கூடாரமாக மாறிய இலங்கையின் பாராளுமன்றம் – சிவஞானம் சிறிதரன்.