வணிகம்

இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கே.எம்.மஹிந்த சிறிவர்தனவை நியமித்துள்ளது.

நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் அனுமதியுடன் இலங்கை நாணயச் சபை 2020 பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக இவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் பொருளாதார ஆராய்ச்சி துறை மற்றும் புள்ளிவிவரத் துறைக்கும் பிரதி ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

அத்துடன் அவர் வங்கி கட்டுப்பாட்டாளரின் பொருளாதார ஆராய்ச்சித் துறையின் இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய தங்க விலை நிலவரம்

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம்

‘இலங்கையின் ஆடைகள் தரமானதால் வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது’ அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!