சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் பதவியிலிருந்து ரமால் சிறிவர்தன இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவர் உபாலி மாரசிங்க இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உபாலி மாரசிங்க இதற்கு முன்னர் கல்வி, சுகாதாரம் மற்றும் பெற்றோலியம் உள்ளிட்ட அமைச்சுக்களில் செயலாளராகவும் தேசிய உற்பத்தி திறன் செயலகத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

தியவன்னா ஓயாவில் கவிழ்ந்த சொகுசு காரின் உரிமையாளர் விளக்கமறியலில்

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை…