இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக, 2017-2018 ஆண்டுகளுக்கான எரிபொருளை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருந்த மூன்று நீண்டகால கேள்விப் பத்திரங்களை அவர் இரத்துச் செய்தார்.
இதற்குப் பதிலாக அதிக விலைக்கு உள்ளூர் கேள்விப் பத்திரங்களை செயல்படுத்த வேண்டியிருந்தது,
இதனால் நிறுவனத்துக்கு சுமார் 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.
