உள்நாடு

இலங்கை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர், ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், இன்று (21) அதிகாலை பதிவாகியுள்ளது.

அங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான தாய் ஒருவரே, ஒரே தடவையில் ஆறு குழந்தைகளைப் பிரசவித்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, 3 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் அவர் பிரசவித்துள்ளார்.

இவற்றில் இரண்டாவதாக பிறந்த குழந்தை மாத்திரம் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வெள்ளவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

20 ஆவது திருத்தச் சட்டம் – அரச அச்சுத் திணைக்களத்திற்கு