உள்நாடு

பிரதமருடன் இந்திய விமானப் படைத் தளபதி சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்திய விமானப்படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை வழங்கப்போவதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.

இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர் சம்மாந்துறை பொலிசாரினால் கைது!

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புதிய சேவை முனையம் Gold Route திறப்பு

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு